உள்நாடு

எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 10 ஆயிரம் பேர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அதிகளவில் வெள்ளம் சூழ்ந்துள்ள இரத்தினபுரி, காலி, களுத்துறை, குருணாகல் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எலிக்காய்ச்சல் நோயினால் வருடத்திற்கு 120 முதல் 200 பேர் உயிரிழக்கின்றனர்.

கண் சிவத்தல், காய்ச்சல், எரிச்சல் , காயங்களில் வீக்கம் ஏற்படல் மற்றும் கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல் என்பன எலிக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் ஆகும்.

எனவே, இந்த நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள் உடனடியாக வைத்தியரை நாடுவது அவசியம் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பாகிஸ்தான்-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இருதரப்பு பேச்சுவார்த்தை

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக சமல்? ஆரம்பிக்கும் முறுகல்

எரிபொருள் கொள்வனவிற்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்