சூடான செய்திகள் 1

எலிக்காய்ச்சல் காரணமாக 19 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-குருநாகல் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளதாக வடமேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் எம். சரீட் தெரிவித்துள்ளார்.

பொல்பிட்டிகம, ரிதீகம மற்றும் மஹவ ஆகிய பகுதிகளில் மேலும் 187 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நெற்செய்கை விவசாய நடவடிக்கைகள் ஊக்கமாக இடம்பெறுகின்றதுடன், குறித்த இந்த காலகட்டத்தில் விவசாயிகள் எத்தகைய அணுகுமுறைகளை கையாளவேண்டும் என்பது தொடர்பிலான தெளிவுபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகிறதாக தெரிவிக்கப்படுகிறது.

உரியவகையில் மருந்துகளை உட்கொள்வதன் மூலம் எலிக்காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதாக வடமேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் எம். சரீட் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

களுத்துறை மாவட்டத்தில் 10 மணி நேர நீர்வெட்டு

கொழும்பு பிரதேசத்தில் 24 மணித்தியால நீர் விநியோகத் தடை

பணிப்புறக்கணிப்பு இன்று நான்காவது நாளாகவும் தொடர்கிறது