சூடான செய்திகள் 1

எறும்புகளினால் அச்சத்தில் வாழும் மக்கள்!!

(UTV|COLOMBO)-மரதன்கடவல பிரதேசத்தில் எறும்புகளினால் பிரதேசவாசிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எறும்புகளின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்வதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

வீடுகள் , வீட்டுத் தோட்டம் , கழிவறை , ஜன்னல் , மின்சார உபகரணங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது இடங்களிலும் எறும்புகள் இவ்வாறு சூழ்ந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

ஆடைகள் மற்றும் காலணிகள் இந்த எறும்புகளால் சேதமாக்கப்பட்டுள்ளன.

நீண்ட காலமாக நிலவும் இந்த எறும்பு பிரச்சினைக்கு இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பிரதேசவாசிகள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

 

 

 

Related posts

இலங்கை மக்களுக்கான மகிழ்ச்சித் தகவல்!!!

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது

இன்று(16) பயண கட்டணங்களை குறைப்பது தொடர்பில் கலந்துரையாடல்