உள்நாடு

எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 3,000 கோழி குஞ்சுகள் தீக்கிரை

(UTV |  குருணாகல்) – குருணாகல், பன்னல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேகம எலிபிச்சிய பிரதேசத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

இன்று (24) அதிகாலை 3.20 மணியளவில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தினால் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கோழி குஞ்சுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர்கொழும்பு பகுதியில் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான 17 ஏக்கர் காணியில் கோழிப்பண்ணை அமைந்துள்ளது. குறித்த கோழிப்பண்ணையில் சுமார் 35,000 குஞ்சுகளை அடைக்கக்கூடிய ஏழு கூடங்கள் உள்ளன. அதில் ஒரு கூடத்தில் தீப்பிடித்துள்ளது.

கோழி குஞ்சுகளுக்கு தேவையான வெப்பத்தை ஏற்படுத்த 37.5 கிலோகிராம் எடையுள்ள மூன்று எரிவாயு சிலிண்டர்கள் பொருத்தப்பட்டிருந்த நிலையில், அதில் ஒரு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும் நீர்கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன் சேத விபரங்கள் இதுவரை கணக்கிடப்படவில்லை.

பன்னல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கொரோனா வைரஸ் – மேலும் ஏழு பேர் அடையாளம்

உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படாது – பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

editor

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் தெற்காசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும்!