உலகம்

எரியும் மெக்ஸிக்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

(UTV |  மெக்ஸிக்கோ) – கிழக்கு மெக்ஸிகன் மாநிலமான வெராக்ரூஸின் மினாடிட்லான் நகரில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தீ விபத்துக்குள்ளாகியுள்ளதாக நாட்டின் பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் சுற்றுச் சூழல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாசரோ கார்டனாஸ் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமே புதன்கிழமை பிற்பகல் தீப்பிடித்து எரிந்துள்ளதாகவும், தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை படையினர் முன்னெடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தினால் இதுவரை எந்த உயிரிழப்புகளும் ஏற்பட்டதாக பதிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உலக அளவில் 2.30 கோடியை தாண்டிய பலிகள்

இங்கிலாந்தில் டிசம்பர் 2 வரை மீண்டும் முழு ஊரடங்கு

மெக்சிக்கோவில் 7.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்