உள்நாடு

எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 92 ரக ஒக்டேன் பெட்ரோல் லீற்றரின் விலை 157 ரூபாவிலிருந்து 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 177 ரூபாயாகும்.

அத்துடன், 95 ரக ஒக்டேன் பெட்ரோல் லீற்றரின் விலை 184 ரூபாவிலிருந்து 23 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 207 ரூபாயாகும்.

அதேநேரம், ஒட்டோ டீசல் 10 ரூபாயால் அதிரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் விலை 111 ரூபாயிலிருந்து 121 ரூபாயாக உயர்ந்துள்ளது.

சுப்பர் டீசல் லீற்றர் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், 144 ரூபாவாக இருந்த நிலையில் அதன் புதிய விலை 159 ரூபாவாகும்.

இதேவேளை, 77 ரூபாயாக இருந்த மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்று 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 87 ரூபாயாகும்.

Related posts

மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, துமிந்த மீதான தடை நீடிப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று முதல் பி.சி.ஆர் பரிசோதனை

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்கமாட்டோம் – பிரதமர் தினேஷ்.