சூடான செய்திகள் 1

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் தீர்மானிக்கும் குழு இன்று மாலை கூடுகிறது

(UTV|COLOMBO)-விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையில் திருந்தங்களை மேற்கொள்வது தொடர்பில் தீர்மானிக்கும் குழு இன்று(10) மாலை 3 மணிக்கு அமைச்சர் மங்கள சமரவீரவின் தலைமையில் நிதி அமைச்சில் அலுவலகத்தில் ஒன்றுகூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து நாட்டிலும் விலையில் மாற்றங்களை ஏற்படுத்த ஒவ்வொரு மாதத்திலும் 10 ஆம் திகதி குறித்த குழு ஒன்று கூடி தீர்மானங்களை மேற்கொள்வது வழமையாகும்.

இதன்படி, உலக சந்தையில் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 51.7 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

களனிவெளி புகையிரத சேவைகள் தாமதம்

மதூஷின் சட்ட ரீதியற்ற மனைவியுடைய கார் பொலிசாரினால் கண்டுபிடிப்பு

காற்றுடன் கூடிய மழை