உள்நாடு

எரிபொருள் விலை குறைக்கப்பட்டது

(UTV | கொழும்பு) –  பெட்ரோல் 92 மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலையை இன்று (17) இரவு 9.00 மணி முதல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் அமைச்சர் டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

குறைக்கப்பட்ட விலை மற்றும் புதிய விலை கீழே,

* பெட்ரோல் 92 – ரூ.40 (புதிய விலை ரூ.370)

* ஆட்டோ டீசல் – ரூ.15 (புதிய விலை ரூ.415)

லங்கா ஐஓசி எரிபொருள் விலையை, CPC இன் அதே விலைக்கு குறைக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

Related posts

ராஜித ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

மேலும் 127 பேர் பூரண குணம்

கொவிட் பரவலை தொடர்ந்து அரச ஊழியர்களுக்கான அறிவித்தல்