சூடான செய்திகள் 1

எரிபொருள் விலை உயர்வுக்கு தயாராகுங்கள்…

(UTV|COLOMBO)-எரிபொருள் விலைச் சூத்திரம் எதிர்வரும் 10 ஆம் திகதி வருவதாகவும் அதற்காகத் தயாராகுமாறும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று (27) பகிரங்க அறிவித்தல் விடுத்தார்.

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகளவு அதிகரித்துள்ளது. ஒரு பீப்பா மசகு எண்ணெய் 80 டொலர் வரை உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் உள்நாட்டிலும் இருக்கும் எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான முரண்பாடு அதிகரித்தால் ஒரு பீப்பா மசகு எண்ணெய்யின் விலை 100 டொலரையும் தாண்டி விடும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

கொழும்பு ரோயல் கல்லூரியில் நேற்று  (27) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய 06 வேட்பாளர்கள்.

எதிர்க்கட்சி தலைவர் நாடு திரும்பினார்

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 745 ஆக அதிகரிப்பு