உள்நாடு

எரிபொருள் விநியோகம்; மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை

(UTV | கொழும்பு) –  எரிபொருள் விநியோகம்; மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை

நாட்டின் பல பகுதிகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதையடுத்து

எரிபொருள் விநியோகம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அவரது த்விட்டேர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

அத்தோடு எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு
நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் நாட்டில் எரிபொருள் விலை திருத்தம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த விலை திருத்தம் காரணமாக அநேகமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள், எரிபொருள் கொள்வனவிற்கான கோரிக்கையை முன்வைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று (01.06.) மாலை மற்றும் நாளை (02.06.) காலை அளவில் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எல்பிட்டிய உள்ளூராட்சி சபை தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய பொதுஜன பெரமுன.

editor

நாட்டில் 14ஆவது கொரோனா மரணம் பதிவாகியது

பாதாள உலகக்குழுவை ஒடுக்கும் அரசாங்கத்தை உருவாக்குவேன் – அனுர

editor