உள்நாடு

எரிபொருள் நெருக்கடியை தீர்க்க மலேசியா உதவி

(UTV | கொழும்பு) – ஜூலை 10 அல்லது 11 ஆம் திகதிகளில் இலங்கைக்கு 50,000 மெற்றிக் தொன் பெட்ரோல் மற்றும் 10,000 மெற்றிக் தொன் மண்ணெண்ணெய் வழங்கவுள்ளதாக மலேசிய நிறுவனம் ஒன்று உறுதிப்படுத்தியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த மலேசிய நிறுவனம் 50,000 மெற்றிக் தொன் பெட்ரோலை இரண்டு கட்டங்களாக இலங்கைக்கு வழங்க முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிறுவனம் இதுவரை பெட்ரோல் கப்பல் தொடர்பில் தகவல் வழங்கவில்லை எனவும், எதிர்வரும் ஜுலை 10 அல்லது 11ஆம் திகதி கப்பலை இலங்கைக்கு கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

Related posts

இன்று முதல் அதிகரிக்கப்படும் மின் கட்டணம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரேசில் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

அஜித் பிரசன்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு