உள்நாடு

எரிபொருள் கப்பல் வரும் 22ம் திகதி நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எதிர்வரும் ஜுலை மாதம் 22 ஆம் திகதி பெட்ரோலை ஏற்றிச் செல்லும் கப்பலை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பிரதமரின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் கலந்து கொண்ட நேற்றைய (29) ஊடக சந்திப்பிலேயே பிரதமரின் ஆலோசகர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “.. பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு தேவையான நிதி இருந்தாலும், எரிபொருள் கப்பல்களை ஆர்டர் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள அவசர நடவடிக்கைகள் உட்பட நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பிலும் பிரதமர் விளக்கமளித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக எதிர்வரும் ஜூலை மாதம் 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அடுத்த டீசல் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளது.. அன்றைய தினங்களில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 38,000 மெற்றிக் தொன் டீசல் கப்பலை எதிர்பார்க்கிறோம், அடுத்த எரிபொருள் கையிருப்பு வரும் வரை நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

இலங்கையில் தற்போது 11,000 மெற்றிக் தொன் டீசல், 5,000 மெற்றிக் தொன் பெற்றோல், 30,000 மெற்றிக் தொன் எரிபொருள் எண்ணெய் மற்றும் 800 மெற்றிக் தொன் விமான எரிபொருட்கள் உள்ளதாக பிரதமர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, லிட்ரோ நிறுவனம் அடுத்த 4 மாதங்களுக்கு 100,000 மெற்றிக் தொன் எரிவாயுவை ஆர்டர் செய்திருப்பதால் எரிவாயு விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்றும் ஜூலை 6, 10, 16, 19, 21 மற்றும் 31 ஆம் திகதிகளில் எரிவாயுக் கப்பல்கள் வந்து சேரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது…”

Related posts

தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரிய மனுவிற்கு திகதியிடப்பட்டது

editor

அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது

வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு