உள்நாடு

எரிபொருள் ஒதுக்கீடு இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  எரிபொருள் ஒதுக்கீடு இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

வாகனங்களுக்காக, ஒரு வாரத்திற்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கம் (QR குறியீட்டு முறைமைக்கு அமைய,) இன்று நள்ளிரவு முதல், அதிகரிக்கப்படவுள்ளது.

தற்போது, மோட்டார் சைக்கிளுக்கு 7 லீற்றரும், முச்சக்கர வண்டிகளுக்கு 8 லீற்றரும் எரிபொருள் வழங்கப்படுகிறது.

அந்த எரிபொருள் ஒதுக்கம், 14 லீற்றராக அதிகரிக்கப்படவுள்ளது.

பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்காக வழங்கப்படுகின்ற 15 லீற்றர் எரிபொருள் ஒதுக்கம், 22 லீற்றராக அதிகரிக்கப்படவுள்ளது.

பேருந்துகளுக்காக, வழங்கப்பட்டு வருகின்ற 60 லீற்றர் எரிபொருள் ஒதுக்கம், 125 லீற்றராகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

லொறிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்ற 75 லீற்றர் எரிபொருள் ஒதுக்கம், 125 லீற்றராகவும், கார்கள் மற்றும் வேன்களுக்காக வழங்கப்படுகின்ற 30 லீற்றர் எரிபொருள் ஒதுக்கம், 40 லீற்றராகவும், விசேட தேவை வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கம், 45 லீற்றராகவும் அதிகரிக்கப்பட உள்ளது.

ஏனைய வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கம், 25 லீற்றரில் இருந்து 45 லீற்றராகவும் அதிகரிக்கப்படவுல்லமையும் குறிப்பிடத்த்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

CEYPETCO தீர்மானமில்லை

நிலக்கரி ஒப்பந்தம் அமைச்சரவையால் இரத்து

உழவு இயந்திர விபத்து – மத்ரஸாவின் அதிபர், ஆசிரியர் மற்றும் உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவர் கைது

editor