உள்நாடு

எரிபொருள் இல்லாததால் சீனிக்கு தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – லங்கா சீனி நிறுவனத்திற்கு சொந்தமான பெல்வத்தை சீனி தொழிற்சாலையை எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக மூடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இந்நிலைமையினால் கரும்புகளை கொண்டு வர வேண்டாம் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், வெட்டப்பட்ட கரும்புகளை மாத்திரம் அரைப்பதற்கு பதப்படுத்தப்பட்டு வருவதாகவும் பெல்வத்தை தொழிற்சாலையின் பிரதான செயற்பாட்டு அதிகாரி வஜிர குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலையின் டர்பைன் இயந்திரம் செயலிழக்கச் செய்யப்பட்டு, டீசலில் இயங்கும் ஜெனரேட்டர் மூலம் தொழிற்சாலை இயங்குகிறது.

தொழிற்சாலை மற்றும் பிற வாகனங்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் நான்காயிரம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது டீசல் கிடைக்காததால் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பணியாளர்களை மட்டும் அழைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று

யோஷித ராஜபக்ஷ CIDயில் முன்னிலை

editor

தப்லீக் பணியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 08 இந்தோனேஷியர்களும் விடுதலை

editor