சூடான செய்திகள் 1

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் இல்லை- நிதி அமைச்சு

(UTV|COLOMBO) பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இம்முறை எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் அறிக்கை ஒன்றின் ஊடாக நேற்றைய  தினம் நிதி அமைச்சு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, மாதாந்தம் 10 ஆம் திகதி அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த நிலையில், சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டு வருகின்றபோது, பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த மாதம் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

 

 

 

Related posts

ஆறுமுகன் தொண்டமான் பதவி விலகினார்

அரச ஊழியர்கள் தாமதிக்காது கடமைக்கு சமூகமளிக்கவும்

ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்