வகைப்படுத்தப்படாத

எயார் – இந்தியா விமானம், 130 பயணிகளுடன் விபத்து…

(UTV|COLOMBO)- திருச்சியிலிருந்து துபாய்க்கு புறப்பட்ட எயார் – இந்தியா விமானம், இன்று(12) அதிகாலை 1.30 மணியளவில் விமான நிலைய சுற்றுச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 130 பயணிகளுடன் புறப்பட்ட குறித்த இந்த விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தின் சக்கரங்கள் விமான நிலைய சுற்றுச்சுவர் மற்றும் அதனருகே இருந்த வான் கட்டுப்பாட்டு கோபுரத்தில் உரசியதை அடுத்து, குறித்த விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டது.

குறித்த விமானம் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாகவும், 130 பயணிகளும் பாதுகாப்பாக இருக்கின்றனர் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சிறுவனை சரமாரியாக தாக்கிய சிறைக்காவலர்கள் கைது

அமெரிக்காவின் சுதந்திர தினத்திற்கு இலங்கை வாழ்த்து

Maximum security for Esala Perahera