சூடான செய்திகள் 1

எமில் ரஞ்சன் மற்றும் ரங்கஜீவ ஆகியோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

(UTV|COLOMBO)-முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசாரணைப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் நியோமல் ரங்கஜீவ ஆகியோருக்கு எதிர்வரும் 18ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 09 ஆம் திகதி, வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு இடையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ, முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோர் முறையே கடந்த மார்ச் 28, 29 ஆம் திகதிகளில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்தோடு 40 பேர் காயமடைந்தமையும் நினைவுகூறத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

எதிர்ப்பார்க்கப்படுகின்ற பொருளாதார சந்தையை உருவாக்க 10 வருடங்கள் தேவை

துபாயில் கைதான மாத்தறை ‘ஜங்கா’ வீட்டில் இருந்து துப்பாக்கி ரவைகள் 23 மீட்பு