இலங்கையின் சுதந்திரத்தினத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்ட தேசத்தினை கட்டியெழுப்ப ஒற்றுமையுடன் பயணிப்பது காலத்தின் தேவையாகும் என தெரிவித்துள்ள அமேசன் கல்லுரி மற்றும் அமேசன் கெம்பஸ் நிறுவகத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இல்ஹாம் மரைக்கார் புரிந்துணர்வுடனும், தியாகங்களுடனும் எமது நாட்டினை கட்டியெழுப்புவோம் என்றும் கூறியுள்ளார்.
இலங்கையின் 77 வது சுதந்திரத்தினத்தினை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இலங்கை அடக்கு முறையாளர்களிடம் இருந்து மீட்டெடுக்கப்பட்டு இன்றுடன் 77 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், இன்னும் எமது நாடு பொருளாதார, கலாச்சார மற்றும் இதர துறைகளிலும் பின்தங்கிய நிலையினையே கண்டுள்ளது.
இதற்கு காரணம் நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற சிந்தணையின் வீரியம் குறைந்துள்ளதையே எடுத்துக்காட்டுகின்றது.
குறிப்பாக பல்லின அழகான சமூக கட்டமைப்பினை கொண்ட எமது தாய் நாட்டின் பெறுமையினை உலகறியச் செய்வது எமது கடமையாகும்.
எமது தேசத்தின் அடையாளமே எமது வேற்கை என்பதை புரிந்து எம்மில் காணப்படும் மாற்று சிந்தனைகளை புறந்தள்ளி இலங்கையின் பிரகாசத்திற்கும், புரிந்துணர்வு, அன்பு பறிமாற்றம், பரஸ்பரம் என்பனவற்றினை சிரம் கொண்டு பயணிக்கும் நாளாக இன்றைய சுதந்திர தினம் அமைய வேண்டும் என்று வேண்டுவதாக இல்ஹாம் மரைக்கார் மேலும் தமது சுதந்திர தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.