உள்நாடு

என்னை சிறையில் அடைக்க கடும் முயற்சி- சுதந்திர கட்சி மலரும்

“என் அரசியல் பயணம் ஆளுந்தரப்பினருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் என்னைச் சிறையில் அடைக்கச் சகல வழிகளிலும் முயல்கின்றனர். சிறையில் அடைக்கும் அளவுக்கு நான் குற்றம் எதுவும் செய்யவில்லை.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் உண்மைத் தகவல்கள் வெளியானால் தங்கள் அரசியலுக்கு வேட்டு வைக்கப்படும் என்று ஆளுந்தரப்பினரான மொட்டுக் கட்சியினர் எண்ணுகின்றனர். அதனால் அவர்கள் எனது அரசியல் பயணத்தை முடக்க முயல்கின்றனர்.

என் அரசியல் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது. நெருக்கடி நிலைமையிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விரைவில் மீட்டெடுப்பேன். சு.க.வின் தலைமையில் ஆட்சி மலரும் காலம் வெகுதொலைவில் இல்லை.” – என்றார்.

Related posts

இன்று 8 மணி நேர நீர் வெட்டு அமுலில்

மொட்டுக்கட்சி வேட்பாளர் யார் ? 7ஆம் திகதி அறிவிப்பு வருமாம்

ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரிக்க குழு நியமனம்