உள்நாடு

‘என்னை “உயர் மாண்புமிகு” என்று அழைக்காதீர்கள்’ – பதில் ஜனாதிபதி [VIDEO]

(UTV | கொழும்பு) – 19வது அரசியலமைப்பு திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்துவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என விக்கிரமசிங்க உறுதியளித்தார்.

ஜனாதிபதியிடம் உரையாற்றும் போது மேன்மை தங்கியவர் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தடை செய்து ஜனாதிபதிக் கொடியை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

Related posts

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு விநியோகம்

editor

நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடை உத்தரவு நீடிப்பு

மற்றுமொரு அரச தொலைகாட்சி – வானொலி சேவைகள் முடக்கம்