வணிகம்

‘என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா – துருணு திரிய’ – முன்னிலையில் காலி மாவட்டம்

(UTV|COLOMBO)-‘என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா – துருணு திரிய’ கடன் வழங்குவதில் காலி மாவட்டம் முன்னிலை வகிப்பதாக கொள்கை அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கொள்கை அபிவிருத்தி அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை வங்கியினால் செயற்படுத்தப்படும் ‘துருணு திரிய’ கடன் திட்டத்தின் கீழ் இளம் தொழில் முயற்சியாளர்கள் 9 பேருக்கான கடன் நிதி விடுவிக்கப்பட்டமை காரணமாக காலி மாவட்டம் முழு நாட்டிலும் இது தொடர்பில் முன்னிலை வகிக்கிறது. இலங்கை வங்கியினால் வாராந்தம் வெளியிடப்படும் ‘துருணு திரிய’ கடன் திட்டத்தைச் செயற்படுத்துவது தொடர்பான 2018 ஆகஸ்ட் 08 ஆந் திகதிய புதிய முன்னேற்ற மீளாய்வு அறிக்கை ஊடாக இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது. இதற்கிடையே மாகாண ரீதியாக 13 இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் நிதியை விடுவித்துள்ளமையினால் மாகாணங்கள் மத்தியில் மேல் மாகாணம் முன்னிலை வகிக்கிறது. அதேபோன்று ‘துருணு திரிய’ கடன் திட்டத்தின் மாகாண ரீதியான முன்னேற்றம் முன்னைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 40மூ அதிகரித்துள்ளது என அந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.

‘என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா – துருணு திரிய’ கடன் திட்டம் தொடர்பாக இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலுமுள்ள இளம் தொழில் முயற்சியாளர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் காண முடியும். இச்செயற்றிட்டம் வெற்றியடைவதற்கு ஏற்புடைய தரப்பினரின் அர்ப்பணிப்பினைப் பாராட்ட வேண்டும் என்பதுடன், இத்திட்டத்தின் சிறப்பான முன்னேற்றம் அவர்களது தொடர்ச்சியான அர்ப்பணிப்பினை வெளிப்படுத்துகிறது.

இலங்கை வங்கி, பிரதம அமைச்சர் அலுவலகத்தின் கொள்கை அபிவிருத்தி அலுவலகம் மற்றும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு, மத்திய நிகழ்ச்சித்திட்ட முகாமைத்துவப் பிரிவு என்பன ஒன்றிணைந்து செயற்படுத்தும் ‘துருணு திரிய’ கடன் திட்டம் நாட்டின் இளம் தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டும் நோக்குடன் செயற்படுத்தப்படுவதுடன், அதனூடாக 35 வயதுக்கு குறைவான பட்டச் சான்றிதழ் கொண்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழில்சார் திறன் சான்றிதழைப் பெற்றுள்ள, 03 வருடங்களுக்கு மேலாக தொழிலில் ஈடுபட்டுள்ள இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு பிணைஃபிணையாளிகள் எதுவுமின்றி அல்லது நெகிழ்வான பிணை முறைமையொன்றின் கீழ் இந்தக் கடன் வழங்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

BOI தொழிற்சாலைகளின் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பு

பண்டிகை காலப்பகுதியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு நிவாரண பொதி

Oracle Cloud அப்ளிகேஷன் ஊடாக MillenniumIT ESP க்கு வலுவூட்டல்