அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

எனக்கு உண்மையாகவே அரசியல் பிடிக்காது – அர்ச்சுனா எம்.பி அரசியலில் இருந்து ஓய்வா ?

அரசியலில் அதிக காலம் இருப்பதற்கு தான் எதிர்பார்க்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நேற்று (29) மதியம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் ஒரு மருத்துவர் என்றும், கடந்த காலங்களிலிருந்து அரசியலில் ஆர்வம் காட்டவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இந்த முறை மக்களுக்காக பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அரசியல் தனக்கு மிகவும் பிடிக்காத துறை என்றும் குறிப்பிட்டார்.

“எனக்கு உண்மையாகவே அரசியல் பிடிக்காது. நான் 38 வருடங்களாக ஒருபோதும் வாக்களித்ததில்லை. இப்போது நான் உண்மையிலேயே மக்களுக்காக வந்தேன். எனவே இனி செய்ய வேண்டியது எதுவுமில்லை.

அரசியல் என்பது எனக்குப் பிடிக்காத ஒரு துறை. ஆனால் நான் அரசியலில் இருக்கும் வரையில் மக்களுக்காக பாடுபடுவேன்”

Related posts

மஹிந்தவின் இராஜினாமா தொடர்பிலான ஊடக அறிக்கை

Breaking News : ஜனக ரத்நாயக்க ஜனவுக்கு எதிரான வாக்கெடுப்பு நிறைவு : தோல்வியுடன் விடைபெற்றார் ஜனக!

தேசபந்து தென்னகோனுக்கு வௌிநாட்டுத் தடை – வீடுகளை சோதனை செய்த போதிலும் அவர் இல்லை

editor