உலகம்

எந்திரன் சிட்டியை போல கொலை செய்த ரோபோ!

(UTV | கொழும்பு) –

தென் கொரியாவில் ரோபோவால் ஒருவர் நசுக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

ரோபோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனத்தில் பணிபுரியும் 40 வயதுடைய நபர் இந்த ரோபோவை சோதனை செய்து கொண்டிருந்த போதே குறித்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காய்கறி பெட்டிகளை பேக் செய்யும் போது உணவுப் பெட்டிகளில் இருந்து தொழிலாளியை வேறுபடுத்திப் பார்க்கத் தவறிய ரோபோ, அவரைப் பிடித்து, அவரது உடலை கன்வேயர் பெல்ட்டில் தள்ளி, அவரது முகத்தையும் மார்பையும் நசுக்கியதாலேயே இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

விபத்தின் பின்னர் தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

twitter நிறுவனத்தின் புதிய CEO

கணினி பயன்பாட்டாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தனது வாக்கினை பதிவு செய்தார் ட்ரம்ப்