உலகம்

எந்தவொரு பதில் தாக்குதல்களிளும் அமெரிக்கா இணையப் போவதில்லை

ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் எந்தவொரு பதில் தாக்குதல்களிளும் அமெரிக்கா இணையப் போவதில்லையென வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் மேற்கு கரை உள்ளிட்ட பகுதிகளை இலக்கு நேற்றைய நேற்றைய தினம் ஈரான் 300க்கும் அதிகமான ட்ரோன் தாக்குதல்களை திடீரென நடத்தியது.

கடந்த ஏப்ரல் முதலாம் திகதி சிரியாவிலுள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு இது பதிலடியென ஈரான் அரசு அறிவித்துள்ளது.

எனினும் ஈரானின் பெரும்பாலான ட்ரோன் தாக்குதல்களை தாம் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் ஈரான் மீது நடத்தப்படும் பதில் தாக்குதல்கள் தொடர்பில் இஸ்ரேல் மீள பரிசீலிக்க வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்தே பதில் தாக்குதல்களுடன் இணையப் போவதில்லையென வெள்ளை மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

Related posts

கனடா அரசாங்கத்தினால் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவு!

ஜி-20 மாநாட்டினை புறக்கணித்த ரஷ்ய ஜனாதிபதி

புதிய வகை கொரோனா வைரஸ் நைஜீரியாவிலும்