அரசியல்உள்நாடு

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவசர மின்சார கொள்முதல் செய்யப் போவதில்லை – அமைச்சர் குமார ஜயகொடி

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவசர மின்சார கொள்முதல் செய்யப்போவதில்லை என புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.

இன்று (03) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

“சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள், டீசல் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து கொள்முதல் செய்யப்போகிறோமா அல்லது அவசர கொள்முதல்களுக்கு செல்கிறோமா என்று.

எங்களுக்கு அவசர மின்சார கொள்முதல்களுக்கு செல்ல எந்த அவசியமும் இல்லை.

இப்போது இந்த நாட்களிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பற்றாக்குறையாக இருந்தாலும், நாங்கள் முதலில் CEBயின் டீசல் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து எடுப்போம்.

CEBயிடம் டீசலால் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன, அவற்றிலும் குறைந்த செலவில் இயங்கும் ஒன்றில் இருந்துதான் நாங்கள் எடுக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

Related posts

பாணின் விலை குறைப்பு

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம்

இலங்கையில் தங்கியுள்ள வௌிநாட்டவர்களுக்கான அறிவிப்பு