உள்நாடு

எதிர்வரும் 9ம் திகதி மஹிந்த பதவியேற்பு

(UTV | கொழும்பு) – இலங்கையின் அரசியல் வரலாற்றில் 43 வருடங்களின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

1977ஆம் ஆண்டின் பின்னர் தனிக்கட்சியாக 145 ஆசனங்களை பெற்று அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 6,853,693 வாக்குகளை பெற்றுள்ளது. இது மொத்த வாக்குகளில் 59.09 சதவீதமாகும். அதற்கமைய 128 ஆசனங்களை பெற்றுள்ளது.

பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில் பொதுஜன பெரமுன கட்சி, தேசிய பட்டியல் ஊடாக 17 ஆசனங்களை பெற்றுள்ளது. மொத்தமாக 145 ஆசனங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சிறிய தொழிநுட்ப பிரச்சினை

அனைத்து வகையான பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியாகியது