உள்நாடு

எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விடுமுறை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை(04) முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 4, 5, 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நாடாளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் தரம் 11 ,12 மற்றும் 13 ஆகியவற்றுக்கான கல்வி நடவடிக்கைகள் கடந்த 27 ஆம் திகதி மீளவும் ஆரம்பமானது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி தரம் 5 10 11 12 மற்றும் தரம் 13 ஆகியவற்றுக்கான கல்வி நடவடிக்கைகள் வாரத்தில் ஐந்து நாட்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவைதவிர தரம் 1 2 3 மற்றும் தரம் 4 ஆகியவற்றுக்கான கல்வி நடவடிக்கைகள் நடவடிக்கைகள் வாரத்திரி ஒரு நாள் மாத்திரமே முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

எரிவாயு சம்பவங்கள் – குழு அறிக்கை இன்று ஜனாதிபதிக்கு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு

இஸ்லாமியர்கள் இன்று தங்கள் புனித ரமழான் பண்டிகையை கொண்டாடுகின்றனர்