உள்நாடு

எதிர்வரும் 4 மாதங்களுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பணம் ஒதுக்கப்பட்டுள்ள விதம்

(UTV | கொழும்பு) – இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் திருத்தங்களைச் சமர்ப்பித்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை எதிர்வரும் 30ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பிக்க உள்ளார்.

சட்டமூலத்தின்படி, 2022 நிதியாண்டுக்காக அரசாங்கத்தின் அமைச்சுச் சேவைச் செலவு 3,275,876,558,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சுச் சேவைச் செலவீனத்தை 480 பில்லியன் ரூபாவால் அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கைக்கு உள் அல்லது வெளியில் இருந்து 2022ஆம் ஆண்டில் கடன் பெறும் வரம்பை 3,200 பில்லியன் ரூபாவில் இருந்து 4,082 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 302 பேர் கைது

பாராளுமன்றம் கலைப்பு தொடர்பாக விமல் கருத்து

அரசியல் பழிவாங்கல்கள் – ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு