சூடான செய்திகள் 1வணிகம்

எதிர்வரும் 30 ஆம் திகதி தேசிய காய்கறி சந்தை கண்காட்சி…

(UTV|COLOMBO) எதிர்வரும் 30 ஆம் திகதி நச்சுத்தன்மையற்ற தேசிய காய்கறி சந்தை மற்றும் கண்காட்சி  நடைபெறவுள்ளது.

மேலும் ஏப்ரல் முதலாம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது.

நச்சுத்தன்மையற்ற உணவுப்பொருள் உற்பத்தி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டில் சிறுநீரக நோயாளர்கள், நீரிழிவு நோயாளர்கள் மற்றும் புற்று நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதற்கு பாதுகாப்பற்ற, நச்சுத்தன்மை கொண்ட உணவுப் பொருட்களே காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

நாடாளுமன்றில் ஒழுக்க கோவையை மீறினால் உறுப்புரிமை நீக்கும் சட்டம்- நீதியமைச்சர்

ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் சமையலறைக்கு சீல்…

லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது