உள்நாடு

எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட மாட்டாது

(UTV|கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களையும் அலவத்துகொடை, வரக்காபொல மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பொலிஸ் பிரிவுகளையும் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று(24) காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று(24) இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று(24) இரவு 8 மணிக்கு பிறப்பிக்கப்படுகின்ற ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 5 மணிக்கு மீண்டும் தளர்த்தப்படவுள்ளது.

அத்துடன் கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்திருந்தமை குறிப்பிடதக்கது

Related posts

சனத் நிஷாந்தவிற்கு பிடியாணை

பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை நாளை முதல் விநியோகம்

editor

மக்களும் கட்சியும் விரும்பினால் அரசியலில் ஈடுபடுவேன் – சனத் நிஷாந்தவின் மனைவி