உள்நாடு

எதிர்வரும் 06ஆம் திகதி அன்டிஜன் பரிசோதனை

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் 06ஆம் திகதி அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமென பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் பணியாளர்கள், பாராளுமன்ற ஊடகவியலாளர்களும் இதன்போது அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு விருப்பம் என்றால் மாத்திரமே பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என பாராளுமன்ற செயலாளர் நாயக அலுவலகம் அறிவித்துள்ளது.

பாராளுமன்ற அமர்வு 06ஆம் திகதி காலை 10 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இந்த தினத்தில் காலை 9.30 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரையில் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற சேவையை பாதுகாப்பாக முன்னெடுப்பதற்கு இவ்வாறு அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டுமென சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

இதனடிப்படையிலேயே பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள், ஊடகவியலாளர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

Related posts

பெளசியின் எம்பி பதவியை கோரி முஜூபுர் ரஹ்மான் நீதிமன்றை நாடுகின்றார்!

‘நாட்டின் இளைஞர்கள் விரும்பும் நாட்டைக் கட்டியெழுப்ப பாடுபடுங்கள்’

இன்றைய வானிலை (Weather Update)