உள்நாடு

எதிர்வரும் 03 நாட்களுக்கு எரிபொருள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் மூன்று நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும், தேவையில்லாமல் எரிபொருள் குவிவதை தவிர்க்குமாறும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

டீசல் சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று நேற்று நாட்டினை வந்தடைந்ததுடன், இந்திய கடன் வசதியின் கீழ் மேலும் மூன்று கப்பல்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தீவை வந்தடைய உள்ளன.

அதன்படி, போதுமான அளவு எரிபொருள் இருப்பு இருக்கும் என எரிசக்தி அமைச்சர் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்படும் வரை பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

கெலிஓயாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு

கட்டுநாயக்கவில் விசேட ஆய்வுக் கூடம் திறப்பு

சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்