சூடான செய்திகள் 1வணிகம்

எதிர்வரும் வாரம் முதல் தேங்காய் எண்ணெயைப் பரிசோதிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) எதிர்வரும் வாரத்திலிருந்து தேங்காய் எண்ணெய் தயாரிக்கும், விற்பனை செய்யும் இடங்களை விசேட பரிசோதனை செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தரமற்ற ரீதியில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப் பெறும் தகவல்களுக்கமையவே இந்த பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த பரிசோதனை நடவடிக்கையின் போது பெற்றுக்கொள்ளப்படும் மாதிரிகளின் இரசாயன பகுப்பாய்வு அறிக்கைக்கமைய மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே தரமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை அல்லது விநியோகம் தொடர்பிலானத் தகவல்களை குறித்த பிரதேசங்களிலுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் அலுவலகத்துக்கு தெரிவிக்குமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

இன்று மற்றும் நாளை பாடசாலைகளுக்கு பூட்டு

கிஹான் பிலபிட்டிய மீதான விசாரணை அறிக்கையை ஆராய 5 பேர் கொண்ட குழு நியமனம்

எல்.பி கேஸ் மீள் ஏற்றுமதி நிலையம் ஹம்பாந்தோட்டையில்…