உள்நாடு

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் உர மானியம் வழங்கப்படும் – அமைச்சர் விஜித ஹேரத்

நெல் விவசாயிகளுக்கான 25,000 ரூபா உர மானியம் வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“பெரும் போகம் ஆரம்பமாகவுள்ளது. அடுத்த வாரம் திங்கட்கிழமைக்குள் இந்த உர மானியம் அம்பாறை மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும்…
அதிகரிக்கப்பட்டதை வழங்க பணியாற்றி வருகிறோம்.

அதன் பின்னர் பொலன்னறுவை, அநுராதபுரம், மஹியங்கனை மற்றும் மகாவலி பிரதேசங்களில் உள்ள விவசாயிகளுக்கு இதனை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.

Related posts

அரசாங்க இலத்திரனியல் ஊடகங்கள் ஒரே நிர்வாகத்தின் கீழ்!

editor

பேரிச்சம் பழத்திற்கான வரி குறைப்பு!

மாணவர்கள் போதைபொருள் பாவனை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்