கிசு கிசுசூடான செய்திகள் 1

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம்

(UTV|COLOMBO) எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு  இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியப் பிரதமர் கடந்த 30ஆம் திகதி இரண்டாவது பதவிக் காலத்திற்காக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதனைதொடர்ந்து முதற் தடவையாக மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு அவர் விஜயம் செய்கிறார். அயல் நாடுகளுடனான நட்புறவுக்கு உள்ள முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவது விஜயத்தின் நோக்கம் என இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

 

Related posts

“போலி ஆவணம் மூலம் பாராளுமன்றிற்கு வந்த வெளிநாட்டு பெண்” நடவடிக்கை அவசியம் – முஜீபுர் ரஹ்மான்

ஈரானிய சபாநாயகரை மஜ்லிஸூஸ் ஸூரா சந்தித்து பேச்சு

மேலும் இரு மரணங்கள் : PCR முடிவுகள் பிற்பகலில் வெளியாகும்