உள்நாடு

எதிர்வரும் செவ்வாயன்று முதல் இரவு வேளைகளில் மின்துண்டிப்பு

(UTV | கொழும்பு) – அனல் மின் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து விட்டதால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் இரவு வேளைகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் டொக்டர் சுசந்த பெரேரா தெரிவித்தார்.

எரிபொருள் பற்றாக்குறையால் பல மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளதால் செவ்வாய்க்கிழமை (25) முதல் தேசிய மின் கட்டமைப்பிற்கு சுமார் 183 மெகாவோட் மின் இழப்பு ஏற்படும் என்று அந்த சபை தெரிவித்துள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்படும் முறை மற்றும் நேரம் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் எனவும், திங்கட்கிழமை வரை மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

கடமைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பில் திங்கள் தீர்மானம்