சூடான செய்திகள் 1

எதிர்வரும் சில நாட்களுக்கு மிகவும் குளிர்ந்த வானிலை…

(UTV|COLOMBO)-நாட்டில் வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் சில நாட்களுக்கு மிகவும் குளிர்ந்த வானிலையை எதிர்பார்ப்பதாக வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனுடன் நாட்டின் பல பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

எனினும் பதுளை மற்றும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

இதேவேளை, மன்னாரில் இருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக களுத்துறை வரையான கடற்கரைக்கு அப்பாலான கடற்பகுதியில் காற்றின் வேகம் இடைக்கிடையில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன், அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

தொடரும் சிறுவர் துஷ்பிரயோகம் – ஜனாதிபதி அதிரடி உத்தரவு

அதிபர் வெற்றிடங்கள், ஜனவரி மாத இறுதிக்குள் நிவர்த்தி

எதிர்வரும் 19 ஆம் திகதி தேசிய இராணுவ வீரர்கள் தினம்