சூடான செய்திகள் 1

எதிர்வரும் சில நாட்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும்…

(UTV|COLOMBO)-எதிர்வரும் சில நாட்களில் நாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் சற்று அதிகரிக்கக் கூடும் என்று வளிடமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மணித்தியாலத்துக்கு 40 – 45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்றுவீசுக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சிறியளவில் மழை பெய்யக் கூடும். கிழக்கு கடற்பரப்பில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 55 கிலோ மீற்றர் வரை வீசக்கூடும். அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது அப் பிரதேசங்களில் தற்காலிகமாக காற்றும் வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ITN இனது நிறைவேற்று அதிகாரியாக ராசா ஹரிச்சந்ர நியமனம்

நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு (UPDATE)