உள்நாடு

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றினால் தடை

(UTV | கொழும்பு) – இலங்கையில் உள்ள சீன தூதரகம் முன்னால் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு முன்னெடுக்கவிருந்த ஆர்ப்பாட்டத்தினை இரத்து செய்யுமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் மீறப்படும் என கூறி கறுவாத்தோட்டம் காவல்துறை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியதனை தொடர்ந்து இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா பரவுவதற்கு சீனாவே காரணம் என தெரிவித்து இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவிருந்ததாக மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

எதிர்வரும் 26 திகதி திங்கட்கிழமை பொது விடுமுறைதினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கடற்படை உறுப்பினர்களில் மேலும் 41 பேர் குணமடைந்தனர்

மேலும் 220 பேருக்கு கொரோனா