கேளிக்கை

எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரூ.200 கோடி வசூலை நெருங்கும் பத்மாவத்

(UTV|INDIA)-தீபிகா படுகோனே, ரன்வீர்சிங் நடித்த ‘பத்மாவத்’ படம் ராஜபுத்திர வம்சத்தினர் எதிர்ப்புகளை மீறி கடந்த 25-ந் தேதி திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. 4 வட மாநிலங்களிலும் மலேசியாவிலும் இந்த படம் வெளியாகவில்லை. எதிர்ப்புகளை மீறி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. வசூலிலும் இந்த படம் சாதனை படைத்துள்ளது.

விளம்பர செலவுகளையும் சேர்த்து பத்மாவத் படத்துக்கு ஆன மொத்த செலவு ரூ.180 கோடி. 24-ந் தேதியன்று சிறப்பு காட்சிகள் மூலம் ரூ.5 கோடி வசூலானது. படம் வெளியான முதல் நாளில் ரூ.19 கோடி வசூலித்தது. இரண்டாவது நாள் ரூ.32 கோடி வசூலானது. 3-வது நாள் சனிக்கிழமையன்று ரூ.27 கோடியும் 4-வது நாள் ஞாயிறன்று ரூ.31 கோடியும் 5-வது நாள் திங்கட்கிழமை ரூ.15 கோடியும் வசூலித்தது. கடந்த 8 நாட்களில் இதன் மொத்த வசூல் ரூ.150 கோடியை தாண்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வார இறுதியில் ரூ.180 கோடி வசூலிக்கும் என்றும், மொத்தமாக ரூ.200 கோடிவரை வசூல் ஈட்டும் என்றும் வினியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. டெலிவிஷன், டிஜிட்டல் மற்றும் வெளிநாட்டு உரிமைகள் மூலமாகவும் படத்துக்கு கணிசமான தொகை கிடைத்து பெரிய லாபத்தை ஈட்டியுள்ளது. இதனால் தீபிகா படுகோனே உள்ளிட்ட படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த படத்தில் நடித்தது குறித்து தீபிகா படுகோனே கூறும்போது, “பத்மாவத் படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் சொன்னபோது பத்மினி, ராணியாக இருந்தவர் என்பது தெரியாது. அவரை தெரிந்து வைத்திருக்க நான் வரலாற்று மாணவியும் இல்லை. கதை கேட்ட பிறகுதான் புத்தகங்கள் படித்து அவரை பற்றி தெரிந்து கொண்டேன்.

ராணி பத்மினி வாழ்க்கையை உள்வாங்கி அவராகவே மாறி விட்டேன். அந்த கதாபாத்திரத்தில் இருந்து நான் வெளிவர பல நாட்கள் ஆகும். இந்த படத்துக்கு எதிர்ப்புகள் இருந்தும் பெரிய வரவேற்பு கிடைத்து இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் வரலாற்று கதைகளில் நடிப்பது குறித்து முடிவு செய்யவில்லை” என்றார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அபர்ணதிக்கு ஆர்யா செய்த ஸ்பெஷல்

இணையதளத்தில் ஹாட்டான டாப்பிக்காக பேசப்படும் பிரபல நடிகை!இதுவா காரணம்?

நயன்தாராவுக்காக கலங்கிய சிவகார்த்திகேயன்