சூடான செய்திகள் 1

எதிர்க்கட்சி தலைவர் விவகாரம் தொடர்பாக முன்னால் ஜனாதிபதியுடன் நாளை பேச்சுவார்த்தை

(UTV|COLOMBO)-எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இந்தக் கூட்டம், முன்னாள் ஜனாதிபதியின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில், நாளை (14) நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தின் போது, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி கொழும்பில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்துக்கு எதிரான பேரணி தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரை மாற்றுவதற்கான அதிகாரம், அரசமைப்பிலோ மற்றும் சம்பிரதாயத்தின் பிரகாரமோ இல்கையென, கடந்த வௌ்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்துக்கு அறிவித்த, சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராக தொடர்ந்தும் செயற்படுவார் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

தொடர்ந்தும் 6 மாவட்டங்களுக்கு ஊரடங்கு சட்டம் நீடிப்பு

ஊழியர்களது விடுமுறைகள் இரத்து

கங்காராம விகாரை – பிரதமர் அலுவலக பகுதி வரையில் வெசாக் வலயம்