உள்நாடு

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்தனர்

(UTV | கொழும்பு) – எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தமது பாதுகாப்பு தொடர்பில் கேள்வியெழுப்பி பாராளுமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து, பாராளுமன்ற வளாகத்துக்குள் போராட்டத்தில் ஈடுபட்பட்டிருந்தனர்.

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் சபாநாயகர் செயற்படுவதாகவும், அவர் பாரபட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்ற நிலையில் அரசாங்கத்துடன் இணைந்துள்ள உறுப்பினர்கள் பலன்களைப் பெறுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, சபாநாயகர் சுதந்திரமான முறையில் செயற்பட்டு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவங்கள் தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று காலை பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, ​​இது தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிப்பதற்காக சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு நியமிக்கப்படும் என சபாநாயகர் அபேவர்தன தெரிவித்தார்.

Related posts

ஊடகவியலாளர்களின் அடையாள அட்டை செல்லுப்படியாகும் காலம் நீடிப்பு

கடந்த 24 மணித்தியாலத்தில் 1,027 பேர் கைது

திங்கள் முதல் அதிவேக நெடுஞ்சாலைகள் வழமைக்கு