அரசியல்உள்நாடு

எதிர்க்கட்சியில் இருந்து சபாநாயகர் ஒருவரை நிறுத்துவது தொடர்பிலான தீர்மானம் நாளை – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சியில் இருந்து ஒருவரை நிறுத்துவதா வேண்டாமா என்பது தொடர்பில் எதிர்க்கட்சியாக ஏனைய தரப்பினர்களுடன் கலந்துரையாடி முடிவை எட்டுவோம். இது தொடர்பாக ஏனைய கட்சிகளுடனும் பேச்சு நடத்தி தீர்மானத்துக்கு வருவோம்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்து அவர்களுக்கு மதிப்பளித்து ஒன்றிணைந்து செயற்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொழும்பில் இன்று(16) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் எமக்கு பல்வேறு முன்மொழிவுகளும் கருத்துக்களும் காணப்படுகின்றன. எதிர்கட்சியில் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

அவர்களுடனும் இது தொடர்பில் கலந்துரையாடி அவர்களது நிலைப்பாடுகளை தெரிந்து கொள்வதும் இங்கு முக்கியமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

தகுதிகளை தவறான முறையில் முன்வைத்து மக்களை தவறாக வழிநடத்துவதும் இங்கு தவறான செயற்பாடாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Related posts

அதிகரித்த முட்டை விலை!

புனித உயிர்த்த ஞாயிறு; ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி

“மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்வார்”