சூடான செய்திகள் 1

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் வௌியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை…

(UTV|COLOMBO)-எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் வௌியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அவசர ஊடக அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

இரா. சம்பந்தன் எந்த நோக்கத்தின் அடிப்படையிலும் இந்த சந்திப்பில் பங்கேற்கவில்லை எனவும் முக்கியமாக எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் இதன்போது எதுவும் கலந்துரையாடப்படவில்லை எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை விஜயராமவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.

இதன்பின்னரே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த ஊடக அறிக்கையை வௌியிட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின – அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்கள் விபரம்

பொதுத்தேர்தலை இரத்து செய்யுமாறு கோரி மேலும் ஒரு மனு தாக்கல்

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்