அரசியல்உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்த சஹ்மி ஷஹீத்

சமாதானத்தின் தூதை ஏந்தி நடைபவணியாக நாட்டைச் சுற்றி வந்த சஹ்மி ஷஹீத் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார்.

சமாதானத்தின் தூதை ஏந்தி சுமார் 1500 கிலோ மீற்றர் தூரம் நடைபவணியாக நாட்டைச் சுற்றி வந்த பேருவளை சஹ்மி ஷஹீத் எனும் இளைஞன், தனது பயணத்தை முடித்துக் கொண்டதன் பிற்பாடு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று(30) சந்தித்தார்.

இலங்கையின் கரையோரப் பாதைகளில் 1500 கிலோ மீற்றர் நடைப்பயணத்தை 45 நாட்களில் நிறைவு செய்த இந்த இளைஞன், அண்மையில் தனது இலக்கை பேருவளை நகரில் நிறைவு செய்தார்.

Related posts

பஸ் கட்டணங்கள் குறையலாம்!

100நாட்களை கடந்த போர்: 24 ஆயிரத்திற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொலை

பதில் பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமிக்க பரிந்துரை