அரசியல்உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்த அர்ச்சுனா – சிவில் செயற்பாட்டாளர்கள் சிஐடியில் முறைப்பாடு

புதிய பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

அவர் பேஸ்புக் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்காக சிவில் செயற்பாட்டாளர்கள் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிரேஷ்டத்துவத்திற்கு ஏற்ப ஆசனங்கள் ஒதுக்கப்படாததால், நேற்று (21) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த ஆசனத்திலும் அமர வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதன்போது யாழ்.மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சபையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தார்.

பாராளுமன்ற ஊழியர் ஒருவர் வந்து எம்.பி.யிடம் இது பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனம் என்று தெரிவித்தபோதும் அவர் ஆசனத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டார்.

மேலும் சுயேட்சை எம்.பி அங்கு நடந்துகொண்ட விதம் சமூக ஊடகங்களில் கூட பெரிதும் விவாதிக்கப்பட்டது.

யாழ்.மாவட்டத்திலிருந்து சுயேட்சைக்குழு இல.17ஐ பிரதிநிதித்துவப்படுத்தி இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்திற்கு தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மேல்மாகாணத்தில் 75 பேர் சிக்கினர்

மீண்டோரின் எண்ணிக்கை 3,000 ஐ கடந்தது

பல அரச நிறுவனங்கள் பணம் இல்லாமல் ஸ்தம்பிதம்?