கேளிக்கை

எதிர்காலம் தொடர்பில் இப்படி ஒரு முடிவெடுத்து விட்டாரே அமலா பால்!!

(UDHAYAM, COLOMBO) – எதிர்காலத்தில் சென்னையில் ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்பது தான் நடிகை அமலா பாலின் திட்டமாம்.

இயக்குனர் ஏ.எல். விஜய்யை விவாகரத்து செய்த பிறகு அமலா பால் படங்களில் படுபிசியாகிவிட்டார்.

கன்னடத்தில் அவர் நடித்த ஹெப்புலி படம் ஹிட்டாகியுள்ள மகிழ்ச்சியில் உள்ளார் அவர். மலையாளம், தமிழிலும் அம்மணி பிசியாக ஓடியோடி நடிக்கிறார். மேலும் பாடலும் பாடுகிறார்.

விஜய்யை பிரிந்துவிட்டாலும் பேட்டி கொடுக்கும்போது எல்லாம் தனக்கு இன்னும் பிடித்த நபர் விஜய் தான் என்று கூறி வருகிறார் அமலா பால்.

அவரிடம் இருந்து நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் அமலா.

திருமண வாழ்க்கை கசந்தபிறகு யோகா, தியானம் மூலம் நிம்மதி தேடி வருகிறார் அமலா பால். மேலும் நேரம் கிடைக்கும்போது எல்லாம் எங்காவது அமைதியான இடத்திற்கு சென்று அமைதியாகி வருகிறார்.

பல இடங்களுக்கு தனியாக பயணம் செய்வது நல்ல அனுபவமாக உள்ளதாக அமலா பால் தெரிவித்துள்ளார். வாழ்க்கை நிறைய பாடங்களை கற்றுக்கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் சென்னையில் ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார் அமலா பால். அந்த ஹோட்டலில் யோகா, தியான வகுப்புகளும் நடத்தப்படுமாம்.

Related posts

இப்படி உடை அணிந்தது ஏன் என்ற சர்ச்சைக்கு ஏ.ஆர்.ரகுமான் மகள் கதிஜா பதிலடி

புதுதோழிகளாக வலம் வரும் நயன்தாரா – தமன்னா

இப்படியும் காதலை சொல்லலாம்!!.(Photo)