உள்நாடு

எதிர்காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் – மஹிந்த

(UTV | கொழும்பு) – கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர், விமர்சிக்கும் அரசியல்வாதிகளால் மக்கள் சார்பாக தமது பொறுப்புக்களை நிறைவேற்ற முடியாது என தெரிவித்தார்.

பிரதமர் மேலும் தெரிவிக்கையில்;
“..சிலரால் மக்களின் பிரச்சினைகளை அரசியல் ரீதியாக பார்க்க முடியவில்லை. விமர்சிக்கலாம். ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டால், அவர்களால் அதைச் செய்ய முடியாது என்பது வரலாறு.
இது ஒரு கடினமான நேரம். எனினும் மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை குறைக்க முடியாது. அரசாங்கம் என்ற ரீதியில் மக்களின் பிரச்சினைகளை அவதானித்து அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தினை வழங்குவோம்..”

Related posts

தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடக் கோரிக்கை

பைசர், மனோ, முத்து முஹம்மது, சுஜீவ எம்.பிக்களாக பதவிப்பிரமாணம்

editor

உதயசூரின் சின்னத்தில் உதயமான தமிழர் ஐக்கிய முன்னணி