உள்நாடு

எதிர்காலத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் ஜனாதிபதி கவனம்

(UTV | கொழும்பு) – கொவிட் – 19 என அறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிக கவனம் செலுத்தியுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் துணை ஆளுநர்களுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இது குறித்து நேற்றைய தினம் (31) கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின்போது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் எதிர்காலத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், குறுகிய மற்றும் இடைக்கால அடிப்படையில் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று இரவு 10.00 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்

editor

கடந்த 24 மணித்தியாலத்தில் – 670 : 04

கொரோனாவிலிருந்து மேலும் 09 பேர் குணமடைந்தனர்