வகைப்படுத்தப்படாத

எடின்பரோ பிரபுக்கள் சர்வதேச விருதுவிழா பிரதமர் தலைமையில் இன்று

(UDHAYAM, COLOMBO) – 2016ம் ஆண்டுக்கான எடின்பரோ பிரபுக்கள் சர்வதேச விருதுவிழா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இன்று நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வினை தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

ஐக்கிய ராஜ்ஜியத்தின் எடின்பரோ பிரபுவான இளவரசர் பிலிப்பின் யோசனைக்கு அமைய 1956ஆம் ஆண்டில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

உலகின் எந்தவொரு நாட்டிலும் 14 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர் யுவதிகள் இதில் பங்கேற்கலாம். இலங்கை உள்ளிட்ட 144 நாடுகளில் இந்த சர்வதேச விருதுவிழா இடம்பெறுகின்றது.

இது வரை சுமார் 80 லட்சம் இளைஞர்கள் உலகம் பூராகவும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்.

1980ஆம் ஆண்டில் இலங்கை இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்தது. நாட்டின் முதலாவது சர்வதேச விருதுவிழா எடின்பரோ பிரபுவான இளவசர் பிலிப் தலைமையில் 1980ஆம் ஆண்டு ஒக்டோபர் 22ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலை: திட்டமிடப்பட்ட செயலா?

சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

பங்களதேஷ் பாராளுமன்ற தேர்தல் – மீண்டும் பிரதமராகிறார் ஷேக் ஹசீனா